Saturday, August 25, 2012

விடுதலை-Viduthalai



இந்தப் புவிதனில் வாழு மரங்களும் 
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும் 
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் 

ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில்செய்து வாழ்வனவோ? வேறு

மானுட ருழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட் டாவிடினு மன்றிநீர்பாய்ச் சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையாக நெற்கள் புற்கள்மலிந் திருக்குமன்றே?
யானெதற்கு மஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்; பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீ

No comments:

Post a Comment