Friday, November 5, 2010

Akkinik kunju***அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

Akkinik kunjonru kanden - athai
    Ankoru kaattilor ponthidai vaithen;
Venthu thaninthathu kaadu; thazhal
    Veerathil kunjenrum mooppenrum undo?
Thatharikita thatharikita thithom
***
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு; தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
***
In order to kindle the freedom struggle Bharathi wrote this poem. He thinks a small fire put in a corner will destroy British.

Ennilatha porutkuvai thanum-எண்ணில்லாத பொருட்குவை தானும்

எண்ணில்லாத பொருட்குவை தானும்
     ஏற்றமும் புவியாட்சியு மாங்கே
விண்ணில்லாதவ நேர்த்திடும் ஒளியும்
     வெம்மையும் பெருந்திண்மையு  மறிவும்  
தன்னிலாவி னமைதியும் அருளும்
     தருவ ளின்றெனதன்னை  யென்காளி
மண்ணிலார்க்குந் துயரின்றிச் செய்வேன்
    வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்

தானம் கேள்வி தவங் கல்வி யாவும்
    தரணி மீதினி லைபெறச் செய்வேன்
வான மூன்று மழைதரச் செய்வேன்
    மாறிலாத வளங்கள் கொடுப்பேன்
மானம் வீரிய மாண்மை நன்னோர்மை
    வண்ணம் யாவும் வழங்குறச   செய்வேன்
ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்
    நான் விருபிய காளி தருவாள்