Wednesday, August 15, 2012

கண்ணம்மா-எனது குல தெய்வம்-kannamma en kuladeivam

‎23. கண்ணம்மா-எனது குல தெய்வம்

ராகம்-புன்னாக வராளி
பல்லவி

நின்னைச் சரணடைந்தேன்-கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

சரணங்கள்

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று (நின்)

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம் (நின்)

துன்ப மினியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட (நின்)

நல்லதுதீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! (நின்)

http://mundasukavignar-bharathiar.blogspot.in/2012/07/ninnai-charan-adainthen-kannamma.html

குறிப்பு 

இப்பாட்டில் பாரதி குலதெய்வத்தை வேண்டுகிறார்.
பொன்னையும் புகழையும் விரும்பும் இவ்வுலக மனிதைப்போல்
கவலைகளுக்கு அடிமையாககூடாதென்றும்.
அதன் பொருட்டு அச்சம் கொள்ளாமல், எல்லாம  தன்செயல் 
என்றில்லாமல், அனைத்தும் குலதெய்வத்தின் செயல் என்றும்,
நினைதபுவடன், அச்சமும் சோர்வும் நீங்கி, அன்பு நெறி கொண்டு 
அறங்கள் வளர்த்திட வேண்டுகிறார்.

   

1 comment:

  1. visitors from Brisbane,Australia and Mountainview,California viewed this post today

    ReplyDelete