Friday, November 5, 2010

Akkinik kunju***அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

Akkinik kunjonru kanden - athai
    Ankoru kaattilor ponthidai vaithen;
Venthu thaninthathu kaadu; thazhal
    Veerathil kunjenrum mooppenrum undo?
Thatharikita thatharikita thithom
***
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு; தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
***
In order to kindle the freedom struggle Bharathi wrote this poem. He thinks a small fire put in a corner will destroy British.

Ennilatha porutkuvai thanum-எண்ணில்லாத பொருட்குவை தானும்

எண்ணில்லாத பொருட்குவை தானும்
     ஏற்றமும் புவியாட்சியு மாங்கே
விண்ணில்லாதவ நேர்த்திடும் ஒளியும்
     வெம்மையும் பெருந்திண்மையு  மறிவும்  
தன்னிலாவி னமைதியும் அருளும்
     தருவ ளின்றெனதன்னை  யென்காளி
மண்ணிலார்க்குந் துயரின்றிச் செய்வேன்
    வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்

தானம் கேள்வி தவங் கல்வி யாவும்
    தரணி மீதினி லைபெறச் செய்வேன்
வான மூன்று மழைதரச் செய்வேன்
    மாறிலாத வளங்கள் கொடுப்பேன்
மானம் வீரிய மாண்மை நன்னோர்மை
    வண்ணம் யாவும் வழங்குறச   செய்வேன்
ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்
    நான் விருபிய காளி தருவாள்

Thursday, October 28, 2010

Cyclone-புயல் காற்று

மனைவி
நேற்றிருன்  தோமந்த வீட்டினிலே , 
இந்த நேர  மிருந்தா லென்படுவோம்?
காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக் 
காத்தது தெய்வ வலிமை யன்றோ?  
மனைவி:
காற்ற டிக்குது, கடல் குமுறுது.
கண்ணை விழிப்பை நாயகனே!
தூற்றல் கதவு சாளர மெல்லாந
தொளைத்  தடிக்குது, பள்ளியிலே.
கணவன்:
வானஞ் சிவந்தது; வைய நடுங்குது:
வழி பராசக்தி காத்திடவே!
தீனக் குழந்தைகள் துன்பப்ப  டாதிங்கு 
தேவி, அருள் செய்ய வேண்டுகின்றோம் 
             

Tuesday, October 26, 2010

nivethitha- நிவேதிதா

நிவேதிதா  அவர்களுக்கு கவிதாஞ்சலி

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
     கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
     டாம்பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
     பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதத்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
      நிவேதிதையை தொழுது நிற்பேன்
                        *************
 
   After meeting Nivethitha devi Bharati realised his mistakes and changed his views and attitude towards womenfolk

    Has the world changed? Women are still stuck in that terrible mire, not only in India but in the entire universe. It is not men's doings alone but also due to the lack of enthusiasm and enlightenment among the women folk themselves..There are women in the world who have accepted their fate and let themselves be treated as slaves in the name of culture and religion and they seem to be complacent about it

Monday, October 25, 2010

Bharathi meets Nivethitha -பாரதியும் நிவேதிதா தேவியும்

1 . பாரதியும் நிவேதிதா தேவியும்

2 . மற்றும் மூடநம்பிக்கை பற்றி கொடிதெழும் பாரதி





முதல் காட்சி:பாரதி நிவேதிதாவை கொல்கத்தாவில் சந்திக்கிறார்.
நிவேதிதா: தனியாகவ வந்தாய்?
பாரதி: இல்லை சென்னை நண்பர்களோடு வந்தேன்
நிவேதிதா: நான் அதை கேட்கவில்லை. உன் மனைவியை அழைதுவரவில்லையா?
பாரதி:காங்கிரஸ் மகாநாட்டில் பெண் என்ன செய்யப்போகிறாள்?
நிவேதிதா:ஆனாகியும் என்ன செய்துவிட்டாய்?
நிவேதிதா: முகத்திற்கு இரண்டு கண்களை போல்தான் ஆணும் பெண்ணும்.
வலது கண் பார்ப்பதெல்லாம் இடது கண்ணும் பார்க்க முடியும்.
ஒரு கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால் எல்லாம் தட்டையாகத்தான்
தெரியும். இந்தியர்கள் மிகுந்த பலசாலிகள். சாதி மாதம் என்று சக்தியை
வீண் செய்கிறார்கள்.
இரண்டாவது காட்சி:
நிவேதிதாவை பார்த்துவிட்டு சென்னைக்கு வீட்டிற்கு வருகிறார்:
குழந்தையை "டேய், டேய், டேய் ".
பாரதி: நிவேதிதா தேவியை சந்திச்சபிறகு புதிய பாரதிய வந்திருக்கேன்.
மனைவி:என்ன சொல்றேள் நீங்க?
பாரதி: மனைவியை சமமா மதிக்காம மூர்க்கத்தனமா எத்தனை முறை
உன்னை அடித்திருப்பேன். என்னை மன்னிச்சிடு செல்லம்மா!
மனைவி:புருஷன்னா ஆம்படையாளை அடிக்கத்தான் செயவா. அதிலென்ன
தப்பு?

பாரதி: பெண்களுக்கிற இந்த மனோபாவம் ஆண் அகம்பாவதைவிட
கொடுமையானது. இது மாறனும். மாற்றியாகணும்.

மூன்றாவது கட்சி: பாரதி தன நண்பர்களை பார்க்க செல்கிறார்.
ஒரு நண்பர்: பாரதி என்ன விஷயம்?
பாரதி: புதுசா பாட்டு எழுதிருக்கேன்!யதுகிரிகிட்ட பாடிக் காட்டலாமே என்று
வந்தேன்! அவளை காணலையே!
நண்பர்: அது வந்து. யதுகிரிக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி உடுத்து.அவ இனிமே
வெளியில் வரமாட்டா , ஆம்பளையோட பேசமாட்டா.
பாரதி: என்னய்யா இது முட்டாள்தனமான சம்ப்ரதாயம்.ருது ஆகறதுக்கு முன்னால
கல்யாணம் நிச்சயம் பண்றது.நிச்சியம் பண்ண பொண்ணை உள்ள பூட்டி
வைக்கிறது. பொன்னுங்கிரவ  கல்யாணத்துக்காக தயார் பண்ற போதை பொருள்
இல்லை. உங்கள் உதவாத மூட நம்பிக்கை எல்லாம் பச்சை குழந்தைமேல்
திணிக்காதீங்க!
நண்பர்:பாரதி வாயை மூடு. அபசாரமா பேசாத! பிரிட்டிஷ் காரங்களுக்கு போடும் கோஷமில்ல.நம்ப சாஸ்திரங்களுக்கு கேவலமாக பேசினா நடக்கிறதே
வேற.
பாரதி: என்னய்யா சாஸ்திரங்கள்? உங்கள் சாஸ்திரங்கள்! உங்கள் சாஸ்திரங்களை
உடைக்கிறது எப்படின்னு எனக்குத் தெரியும்.

Do you like this entry?kindly write your comment.

Saturday, October 23, 2010

Athiparasakthidevi-ஆதிபராசக்திதேவி

Like Vivekanandha Bharathi is a devotee of Kali.
விவேகானந்தரைப்போல பாரதியும் காளி தேவியின் உபாசகர் ஆவார்.
காளியின் மீது காதல்
பின்னோர் இரவினிலே-கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு
கண்ணிவடிவமென்றே-களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா -  இவள்
ஆதிபரசக்திதேவியடா - இவள்
இன்னருள் வேண்டுமடா - பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! 

செல்வங்கள் பொங்கிவரும்; - நல்ல 
தெள்ளறி வைய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே இவை 
அந்தனை கோடி பொருளினுள்ளே நின்று
வில்லை யசப்பவளை -இந்த
வேலை அனைத்தையும் செய்யும் வினைசியைத் 
தொல்லை தவிர்ப்பவளை -நித்தம் 
தோத்திரம் பாடித தொழிதிடு வோமடா


!