Thursday, July 5, 2012

சரஸ்வதி காதல்Saraswathi kadhal

சரஸ்வதி காதல் 



பிள்ளைப் பிராயத்திலே--அவள் 
     பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டே னங்கு 
பள்ளிப் படிப்பினிலே--மதி 
      பற்றிடவில்லை யெநிலுந் தனிப்பட 
வெள்ளை மலரணைமேல் -அவள்
     வீணையுங் கையும் விரிந்த முகமலர்  
விள்ளும் பொருள முதும்-கண்டேன் 
     வெள்ளை மனது பறிகொடுத் தேன் அம்மா!1.


ஆடி வருகையிலே -அவள் 
     அங்கொரு வீதி முனையில் நிற்பாள்;கையில் 
ஏடு தரித்திருப்பாள்-அதில் 
     இங்கிதமாக பதம் படிப்பாள் ,அதை 
நாடி அருகணைந்தால்-பல 
     ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்."இன்று 
கூடி மகிழ்வ"மென்றால்-விழிக்
     கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள்,, அம்மா2. 


ஆற்றங் கரைதனிலே-தனி 
     யானதோர் மண்டப மீதினிலே,, தென்றற் 
காற்றை நுகர்திருந்தேன்--அங்கு 
     கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள் ;அதை 
ஏற்று மகிழ்ந்தே--'அடி 
    என்னோடிணங்கி மணம்புரிவாய்''என்று 
போற்றிய போதினிலே-இளம் 
    புன்னகை பூத்து மறைந்த்விட்டாள் , அம்மா!3 


சித்தந் தளர்ந்ததுண்டோ?-கலைத் 
     தேவியின்மீது விருப்பம் வளர்ந்தொரு 
பித்துப் பிடித்ததுபோல்--பகற் 
     பேச்சும் இரவிற் கனவும் அவளிடை 
வைத்த நினைவை யல்லால்-பிற 
     வாஞ் சையுண்டோ? வய தங்ஙன மேயிரு 
பத்திரண் டாமளவும்-வெள்ளைப் 
பண்மகள் காதலைப் பற்றி நின்றேன்,, அம்மா!4  

No comments:

Post a Comment