Thursday, July 5, 2012

காளி காதல்-kali kadhal

காளி காதல் 
பின்னோர் இரவினிலே--கரும் 
     பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;
கன்னி வடிவமென்றே--களி 
     கண்டு சற்றேயருகிற்சென்று பார்க்கையில் 
அன்னை வடிவமடா !-இவள் 
     ஆதி பரசச்க்தி தேவி யடா!-இவள் 
இன்னருள் வேண்டுமடா!-பின்னர்
      யாவுமுலகில் வசப்பட்டுபோமடா! 1


செல்வங்கள் பொங்கிவரும்ல்--நல்ல 
     தெள்ளறி வெய்தி நலம்பல  சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே இவை 
    அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று 
வில்லை யசைப்பவளை-இந்த 
     வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத் 
தொல்லை தவிப்பவளை-நித்தம் 
    தோத்திரம் பாடித் தொழுதிடுவோமட!

No comments:

Post a Comment