Wednesday, July 4, 2012

காலாஉனை நான்சிறு புல்லென-kalaunai naansirupullena



காலாஉனை நான்சிறு புல்லென   மதிக்கிறேன்;என்றன் 
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்--அட((காலா))
வேலாயூத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல 
வேதாந்தமுரைத்த ஞாநனியர்தமையெண்ணி துதிக்கிறேன்-ஆதி 
மூலாவேன்று கதறிய யானையைக் காக்கவே -நின்றன் 
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ?கேட்ட மூடனே--அட காலா 
ஆலால முண்டவ னடிசர நென்ற மார்க்கண்டன் -
தனதாவி கவரப்போய் நீபட்ட பாட்டினை யறிகுவேன்--இங்கு 
நாலாயிரம் காதம் விட்ட கல்!உன்னை விதிக்கிறேன்-ஹரி 

நாராயனனாகநின்  முன்னே உதிக்கிறேன்--அட காலா 

No comments:

Post a Comment