சித்தாந்தச் சாமி கோயில் | ||
சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில் தீப வொளி யுண்டாம்;-பெண்ணே முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட மூண்ட திருச் சுடராம்;-பெண்ணே! உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும் ஓட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே! கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக் காட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே! தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது தோற்றமுறுஞ் சுடராம்;-பெண்ணே மூன்று வகைப்படும் கால நன்றென்பதை முன்னரிடுஞ் சுடராம்;-பெண்ணே! பட்டினந் தன்னிலும் பார்க்க நன்றென்பதைப் பார்க்க வொளிச் சுடராம்;-பெண்ணே! கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக் காண வொளிர்சுடராம்;-பெண்ணே! |
Sunday, December 2, 2012
சித்தாந்தச் சாமி கோயில்
Labels:
Bharathiyar
Location:
Coimbatore, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment