அறிவே தெய்வம் கண்ணிகள் | ||
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்!-பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் டாமெனல் கேளீரோ? மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயங்கும் மதியிலிகாள்!-எத னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென் றோதி யறியீரோ? சுத்த அறிவே சிவமென்று கூறுஞ் சுருதிகள் கேளீரோ?-பல பித்த மதங்களி லேதடு மாறிப் பெருமை யழிவீரோ? வேடம்பல் போடியொர் உண்மைக் குளவென்று வேதம் புகன்றிடுமே-ஆங்கோர் வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ் வேத மறியாதே. நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று நான்மறை கூறிடுமே-ஆங்கோர் நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந் நான்மறை கண்டிலதே. போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணு நிலையாமே-உப சாந்த நிலையேவேதாந்த நிலையென்று சான்றவர் கண்டனரே. கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று காட்டும் மறைகளெல்லாம்-நீவிர் அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு அவங்கள் புரிவீரோ? உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு, கொள்ளற் கரிய பிரமமென் றேமறை கூவுதல் கேளீரோ? மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்ந்து வெறுங் கதைகள் சேர்த்துப்-பல கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை காட்டவும் வல்லீரோ? ஒன்று பிரம முளதுண்மை யஃதுன் உணர்வெனும் வேதமெலாம்-என்றும் ஒன்று பிரம முளதுண்மை யஃதுன் உணர்வெனக் கொள்வாயே. |
Sunday, December 2, 2012
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
Labels:
Bharathiyar
Location:
Coimbatore, Tamil Nadu, India
Subscribe to:
Post Comments (Atom)
The Wizard of Oz Casino - Dr.D.M.C.
ReplyDeleteWelcome to 포천 출장샵 The Wizard of Oz, home of 춘천 출장안마 the best slots, video poker, and live 안양 출장안마 dealer games. We provide a 김천 출장안마 large 속초 출장샵 variety of free