Thursday, July 5, 2012

லக்ஷ்மி காதல்-Lakshmi kadal

லக்ஷ்மி காதல் 
இந்த நிலையினிலே, அங்கொர் 
     இன்பப் பொழிலினிடையினில் வேறொரு
சுந்தரி வந்து நின்றாள் -அவள்  
     சோதி முகத்தின் அழகினைக் கண்டெனதன் 
சிந்தை திறைகொடுத்தேன்--அவள் 
     செந்திருவென்று  பெயர்சொல்லி னாள் -மற்றும் 
அந்த தினமுதலா-நெஞ்சம்
      ஆரத்தழுவ வேண்டுகின் றேன்,, அம்மா1.  

புன்னகை செய்திடுவாள்--அற்றைப் 
      போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்;சற்றேன 
முன்னின்று பார்த்திடுவாள்--அந்த 
     மோகத்திலே தலை சுற்றிடுங் காண்-பின்னர் 
என்ன பிழைகள்  கண்டோ-அவள் 
     என்னைப் புறக்கணித் தேகிடு வாள்; அங்கு
சின்னமும் பின்னமுமா--மனஞ்  
     சிந்தி யுளமிக நைந்திடுவேன்,, அம்மா 2

காட்டுவழிகளிலே -மலைக் 
     காட்சியிலே,, புனல் வீழ்ச்சியிலே,பல 
நாட்டுப் புறங்களிலே-நகர் 
      நண்ணு சிலசுடர் மாடத்தி லே, சில 
வேட்டுவர் சார்பினிலே--சில 
      வீரரிடத்திலும் வேந்த ரித்திலும்,
மீட்டு மவள்வருவாள்--கண்ட   
       விந்தை யிலேயின்ப மேற்கொண்டுபோம். அம்மா 


No comments:

Post a Comment